×

அம்பை நகராட்சி துப்புரவு பணியாளருக்கு சீருடை வழங்கும் விழா

அம்பை, ஜன. 14:  அம்பாசமுத்திரம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது. ஆணையாளர் (பொ) ஜின்னா தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அதிமுக அமைப்பு செயலாளர் முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு இனிப்புடன் சீருடை, காலனி வழங்கி பொங்கல் வாழ்த்து கூறி பேசினார்.  விழாவில் அதிமுக நகரச் செயலாளர்கள் அம்பை அறிவழகன், கல்லிடைக்குறிச்சி சங்கரநாராயணன், விகேபுரம் கண்ணன், மணிமுத்தாறு ராமையா, மினி சூப்ப்ர் மார்க்கெட் தலைவர் சங்கரலிங்கம், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் மாரிமுத்து, அர்பன் வங்கி துணைத்தலைவர் பிராங்ளின், முன்னாள் கவுன்சிலர் விஜய பாலாஜி, மாவட்ட பிரதிநிதி சுடலை, முன்னாள் விற்பனை கூட்டுறவு சங்க தலைவர் அக்பர்ஷா, கணேசன், மீனாட்சி, அருணாசலம், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட வட்ட செயலர்கள், நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் தஸ்தகீர், ஆறுமுகம், ரவிசந்திரன், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் வீரபாகு உள்ளிட்ட பரப்புறையாளர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : Uniforms ceremony ,cleaning staff ,Amba ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு சீருடை