லயன்ஸ் சங்க இருபெரும் விழா

நெல்லை, ஜன. 14:  குற்றாலம் விக்டரி லயன்ஸ் சங்கம் சார்பில் மண்டல தலைவர் அதிகாரபூர்வ வருகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா கடையநல்லூரில்  நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் கணேசமூர்த்தி தலைமை
வகித்தார். மாவட்ட தலைவர் டாக்டர் மூர்த்தி முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் பேராசிரியர் கதிர்வேல் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நாகராஜன் கொடி வணக்கமும், முத்தையா அரிமா வழிபாடும், வாசித்தனர்.
பிஎஸ் மாரியப்பன் அரிமா அறநெறி கோட்பாடுகளையும், தெய்வநாயகம் பன்னாட்டு அரிமா குறிக்கோள்களையும், வாசித்தனர். சங்க தலைவர் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் சண்முகசுந்தரம் சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கினார். பட்டய தலைவர் மூர்த்தி மணடல தலைவரை சபைக்கு அறிமுகப்படுத்தினார். மண்டல தலைவர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், நிர்வாகிகளை பாராட்டி ேபசினார். நிகழ்ச்சியில் ஏழை நோயாளி ஓருவருக்கு மருத்துவ செலவுக்காக ரூ. 4ஆயிரம் வழங்கப்பட்டது. முன்னாள் தலைவர்கள் நல்லமுத்து, தேவராஜ், வாழ்த்துரை வழங்கினர்.  நிகழ்ச்சியில் வெங்கடேஸ்வரன், பாலகிருஷ்ணன்,ராஜாக்கண்ணு, ஜாகீர்உசேன், தனராஜீ, வி.மாரியப்பன், கலந்து கொண்டனர். பொருளாளர் ரணதேவ் நன்றி கூறினார்.

Tags : ceremony ,Lions Association ,
× RELATED லயன்ஸ் சங்க மாநில மாநாடு