ஏர்வாடியில் மார்கழி பஜனை ஊர்வலம்

ஏர்வாடி, ஜன. 14:  ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோயிலில் மார்கழி மாத பஜனை ஊர்வலம் இன்றுடன் நிறைவுபெறுகிறது.   ஏர்வாடியில் பிரசித்திபெற்ற திருவழுதீஸ்வரர்- பெரியநாயகி அம்பாள் கோயிலில் மார்கழி மாதத்தையொட்டி கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி பஜனை ஊர்வலம் துவங்கியது. இதையொட்டி தினமும் அதிகாலை 5 மணிக்கு இக்கோயிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு 4 ரதவீதிகள் வழியாக பஜனைகள் பாடியவாறு ஆலயத்தை மீண்டும் வந்தடைந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.  இதில் ஏர்வாடி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகப் பங்கேற்றவண்ணம் உள்ளனர். இந்த பஜனை ஊர்வலம் இன்று (14ம் தேதி) நிறைவுபெறுகிறது. இதையொட்டி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு வெற்றி விநாயகர் நற்பணி மன்றம் சார்பாக குத்துவிளக்கு பரிசாக வழங்கப்படுகிறது.

Tags : procession ,Morgan Bajan ,Airwadi ,
× RELATED கோவையில் இளம்பெண் துறவறம் குதிரை வண்டியில் ஊர்வலம்