×

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலம்

நெல்லை, ஜன. 14:  நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடையநல்லூர்:  கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பொறியாளர் தங்கபாண்டி, சுகாதார அலுவலர் நாராயணன், நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், ஆய்வாளர் கிருஷ்ணகுமார், உதவிப் பொறியாளர் முரளி, சுகாதார ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி, மேலாளர் பொறுப்பு முகமது யூசுப், தேர்தல் பிரிவு மாரியப்பன் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் அரசு ஒப்பந்தக்காரர்கள் பொதுமக்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கடையநல்லூர் அடுத்த இடைகால் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உறியடி போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.  பள்ளித் தலைமையாசிரியர் சிதம்பரநாதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அரசு கல்லூரி முதல்வர் வேலம்மாள்  துவக்கிவைத்தார். பட்டதாரி ஆசிரியர்கள் ரேவதி, கிருத்திகாவசுமதி, ராமலெட்சுமி, வினு, கலாநாச்சியார், ஜோஸ்பின்சகாயம், ஜெசிந்தா, உடற்கல்வி ஆசிரியர் பிரதீப்குமார், இளநிலை உதவியாளர் முகைதீன், ஆய்வக உதவியாளர் வேலுச்சாமி, அலுவலக உதவியாளர் வைகுண்டமணி, தையல் ஆசிரியை ரகுமத்தம்மாள், ஓவிய ஆசிரியை ஆனந்தி, உடற்கல்வி ஆசிரியை முருகேஸ்வரி மற்றும் அனைத்து மாணவ, மாணவிகள்  பங்கேற்றனர்.

 கடையநல்லூர் ரத்னா ஆங்கிலப்பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவுக்கு செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தாளாளர் ரத்னாபிரகாஷ் முன்னிலை வகித்தார். முதல்வர் தங்கம் வரவேற்றார். விழாவில் மாணவ மாணவிகளுக்கு கலை மற்றும் பண்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நெடுவயல் சிவசைலநாதநடுநிலைப்பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு பள்ளி நிர்வாகிகள் கணேசன், தம்புசாமி தலைமை வகித்தனர். செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை சுதாநந்தினி வரவேற்றார். விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.சங்கரன்கோவில்:  சங்கரன்கோவில் அருகே சண்முகநல்லூர் ஸ்வர்ண வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் நடந்த விழாவில் ஆசிரியர், மாணவர்கள் சேர்ந்து பொங்கல்  வைத்து வழிபட்டனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டதோடு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தி சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மீனா மற்றும் நிர்வாக  அதிகாரி ஐயர்  செய்திருந்தனர். சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் வேல்ஸ் ஐ.டி.ஐ. வளாகத்தில் நடந்த பொங்கல் விழாவுக்கு வேல்ஸ் கல்விக்குழும சேர்மன் சண்முகச்சாமி தலைமை வகித்தார். வேல்ஸ் ஐ.டி.ஐ. பொது மேலாளா பார்த்திபன் முன்னிலை வகித்தார். ஐ.டி.ஐ. முதல்வர் சிவகுமார் வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 ஏற்பாடுகளை ஐ.டி.ஐ. ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

அம்பை:  அம்பை தாலுகா அலுவலகத்தில்  தாசில்தார் கந்தப்பன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னிலை வகித்த சிவில் சப்ளை தாசில்தார் வெங்கட்ராமன் குத்து விளக்கேற்றினார். மண்டல துணை தாசில்தார் மாரிச்செல்வம் வரவேற்றார். நிகழ்ச்சியை முன்னிட்டு அலுவலக வளாகத்தில் கனிகள், மஞ்சள் குலை, கரும்பு, கிழங்கு வகைகள், பச்சை காய்கறிகள் படைத்து குத்து விளக்கேற்றி பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு நீதித்துறை நடுவர் முருகேஸ்வரி, பத்மாவதி, நில அளவை வரைவாளர் ரூபி, ஆறுமுகம், காஜா, கவுரி, ஆனந்தி, மல்லிகா நில அளவு துறை உள்ளிட்ட வருவாய்துறையினர் பலர் கலந்து கொண்டனர். கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளிச் செயலாளர் சங்கரசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  தலைமை ஆசிரியர் பண்டாரசிவன் வரவேற்றார். பள்ளி வளாகத்தில் கனிகள், மஞ்சள் குலை, கரும்பு, கிழங்கு வகைகள், பச்சை காய்கறிகள் படைத்து பொங்கல் வைத்தனர்.மேலும் தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் சங்கர், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ராகவன், டாக்டர் பத்மநாபன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவி தலைமையாசிரியர் ராமன் நன்றி கூறினார்.

பாவூர்சத்திரம்:   பாவூர்சத்திரத்தில் உள்ள  எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளியில் சமத்துவ பொங்கல்விழா  கொண்டாடப்பட்டது.விழாவுக்கு   ரோட்டரி முன்னாள் துணை ஆளுனர் சந்தானம் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி தேவி முன்னிலை வகித்தார். ஆசிரியை கவிதா வரவேற்றார். விழாவில் மழலை குழந்தைகள் தமிழர்கள் பாரம்பரியமான வேட்டி-சட்டை, பட்டுப்பாவாடை அணிந்து வந்திருந்தனர். பொங்கல் பண்டிகை குறித்து ஆசிரியை சந்தியா பேசினார். பொங்கல் திருநாள் குறித்து ஆடல், பாடல், பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. பள்ளி வளாகத்தில் பொங்கலிட்டு, கரும்பு, மஞ்சள் படைத்து வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை ஆசிரியைகள் ஜெயலட்சுமி, தமிழரசி, தேவி, பேச்சியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.  ஆசிரியை முத்துமணி நன்றி கூறினார்.திசையன்விளை:  திசையன்விளை ஜெயந்திநாதர் ஐடிஐ வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா  விமரிசையாக நடந்தது. ஐடிஐ சேர்மன் கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜேஸ், நிர்வாகி பெனி, முதல்வர் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தனர். பயிற்சியாளர்கள் கதிரவனை வணங்கி பொங்கலிட்டனர். மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.     ஏற்பாடுகளை இளநிலை பயிற்சி அலுவலர்கள் செல்வசுந்தரம், அந்தோனி கோல்பின் பிரகாஷ், தங்ககேஸ்வரன், மாசானமுத்து, ரேக்லேண்ட், சுரேஷ் ஆல்ஸ்டன் லியோ மற்றும் அலுவலக பணியாளர்கள் காத்திகா, அகஸ்டியாள் செய்திருந்தனர்.
கடையம் :  கடையம் வட்டாரத்தில்  பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

 கடையம் அருகேயுள்ள வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரிச் செயலாளரான பங்குத்தந்தை போஸ்கோ குணசீலன் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் சேவியர் இன்னோசென்ட் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழ்த்துறை தலைவர் ரேச்சல் மேனகா வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நெல்லை அனைத்திந்திய வானொலி நிலையத்தைச் சேர்ந்த சந்திரபுஷ்பம், இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அனைத்துத் துறை மாணவ,  மாணவிகள், பேராசிரியர்களும் சேர்ந்து சமத்துவ பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வழிபட்டனர். பேராசிரியை புஷ்பா சாந்தி  நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர் அந்தோணி, நிஷா செய்திருந்தனர்.
கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவுக்கு சார் பதிவாளர் பைசூல் ராணி தலைமை வகித்தார். வக்கீல் புங்கம்பட்டி  ராஜசேகர், ஆவண எழுத்தர்கள் பால் சிங், ரவி, அலுவலக உதவியாளர் நம்பிராஜன் மற்றும் பொதுமக்களில் பலர்  பங்கேற்றனர்

ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில் பொங்கல் திருநாள்  கொண்டாடப்பட்டது.  பள்ளி தாளாளர் சுந்தரம்  பொங்கல் திருநாளின் முக்கியத்துவத்தை பற்றி கூறினார். பள்ளி மாணவ மாணவிகள் கும்மி, கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். அனைத்து மாணவ, மாணவியருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சிகளை தலைமையாசிரியர் ரோகிணி மற்றும்  ஆசிரியர்களும் இணைந்து  நடத்தினர்.
திருமலையப்பபுரத்தில் வாஞ்சி இயக்கம் சார்பில் வீடுகளுக்கு மஞ்சள் குலை வழங்கப்பட்டது. வாஞ்சி இயக்கம் சார்பில் ஆண்டு தோறும் மஞ்சள் குலை வழங்கபடுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு நிறுவன தலைவர் ராமநாதன் அனைத்து வீடுகளுக்கும் மஞ்சள் குலைகள் வழங்கினார். இதில் பிரேமா ராமநாதன். பத்ம லதா, காத்திகா, நரேன், சேவாலயா சங்கிலிபூதத்தான், கண்ணன், சுந்தர். பிச்சம்மாள், கோமு, செல்வி, பூஜா ஆகியோர் கலந்து கொண்டு வீடு வீடாக வழங்கினர்.

Tags : Equality Pongal Festival ,Paddy ,Tenkasi District ,
× RELATED தென்காசி மாவட்டம் மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து