×

புளியரையில் ஆமை வேகத்தில் கொள்முதல் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு வாரமாக காத்துக்கிடக்கும் விவசாயிகள்

செங்கோட்டை, ஜன. 14:  புளியரையில் இயங்கும் அரசு கொள்முதல் நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் நெல் கொள்முதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. செங்கோட்டை தாலுகா மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பிசான சாகுபடி அறுவடை நடந்து வருகிறது. இப்பகுதி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய அரசு புளியரையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொள்முதல் நிலையத்தை தொடங்கியது. இங்கு நெல்லை இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தி ஈரப்பதம் இல்லாமல் காய்ந்த நிலையில் ஒரு கிலோ 19.50 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது இங்கு நெல் கொள்முதல் செய்ய ஒரே ஒரு அதிகாரி மட்டுமே பணியில் உள்ளார். இங்கு ஒரு நாளைக்கு சுமார் 600 மூடைகள் மட்டுமே கொள்முதல் செய்யபடுகிறது.நூற்றுக்கணக்கான விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூடைகளை கொள்முதல் நிலையம் முன்பு குவியலாக வைத்துள்ளனர். தொடர் விடுமுறையாலும், போதிய ஊழியர்கள் இல்லாததாலும் நெல் கொள்முதல் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.  இதனால் விவசாயிகள் இருப்பு வைத்திருக்கும் நெல் காய்ந்து கறுத்துப் போவதுடன், ஒரு மழை பெய்தால் அனைத்தும் நனைந்து வீணாகும் நிலையில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து புளியரை நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து விவசாயிகளிடமிருந்து விரைவாக நெல்
கொள்முதல் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Paddy Purchase Station ,
× RELATED சின்னமனூரில் ஆமை வேகத்தில் நகரும்...