தீக்குளித்த தொழிலாளி சாவு

கேடிசிநகர், ஜன. 14:  சங்கரன்கோவில் ராமசாமிபுரம் 5வது தெருவைச் சேர்ந்த ஆனைக்குட்டி மகன் வேல்முருகன் (21). சென்ட்ரிங் தொழிலாளியான இவர், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 8ம்தேதி உடலில் மண்ணெண்ெணய் ஊற்றி தீக்குளித்தார். இதில பலத்த தீக்காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தீ விபத்தில் சிக்கிய தொழிலாளி பலி