×

பள்ளிகளில் பொங்கல் விழா

திருப்பூர், ஜன.14: திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பள்ளி வளாகத்தின் முன் பகுதியில் பல்வேறு வண்ண காகிதங்கள் அலங்கரிக்கப்பட்டு அடுப்பு கூட்டி மண்பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா தலைமையில்  மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் பல்வேறு பாடப்பிரிவு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு பாடப்பிரிவு ஆசிரியர்கள் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் கலந்துகொண்டனர். மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.திருப்பூர் பிரண்ட்லைன் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து வந்தனர். கோமாதா பூஜை நடந்தது. வகுப்புக்கு ஒரு பொங்கல் வைக்கப்பட்டது. இதையடுத்து தப்பாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம் நடந்தது. உரியடித்தல், கயிறு இழுத்தல், மாடு, குதிரை வண்டி சவாரி, பாரம்பரிய பெட்டிக்கடை, ஆட்டுப்பட்டி, ஏர் கலப்பை, நாட்டு மாடுகள், காளை கண்காட்சி நடந்தது. இவ்விழாவில், பள்ளித் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர்கள் சக்தி நந்தன், வைஷ்ணவி, பள்ளி முதல்வர் வசந்தராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Schools ,Pongal Festival ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...