×

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா

கோவை,ஜன.14:கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா, விவசாய பெற்றோர் சந்திப்பு, ஊராட்சி மன்ற தலைவராக உள்ள முன்னாள் மாணவிக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. கல்லூரி மைதானத்தில் நடந்த பொங்கல் விழாவில் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் பாரம்பரிய உடையில் வந்து மேள தாளத்துடன் பொங்கல் வைத்தனர். விவசாய பெற்றோர் சந்திப்பில் கிரிஃபின் பயிர் அறிவியல் நிறுவன நிர்வாக இயக்குனர் அமல் மார்டின் சிங், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசியர் ரேணுகா தேவி, மாநில தலைமை வேளான் மண்டல அதிகாரி நீலகண்டன், மரம் வளர்ப்புச்சங்கத்தின் வின்சென்ட் ஆகியோர் பங்கேற்று விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி
பேசினர். இதையடுத்து கல்லூரியில் முன்னாள் மாணவியும், நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவருமான சாந்திபிரியாவிற்கு பாராட்டு விழா நடந்தது. கணிதத்துறை உதவி பேராசிரியர் சுதா வரவேற்றார். கல்லூரி செயலாளர் அருட்சகோதரி ரூபி அலங்கார மேரி வாழ்த்துரை வழங்கினார். கணிதத்துறை தலைவர் மேரி பாராட்டி பேசினார். சுயநிதி கணிதப்பிரிவு தலைவர் சிந்து நன்றி தெரிவித்தார்.

Tags : grand ceremony ,Nirmala College for Women ,Coimbatore ,
× RELATED கும்பகோணம் அருகே ஆரியச்சேரி அரசு பள்ளியில் முப்பெரும் விழா