×

போகி பண்டிகையில் பழைய பொருட்களை எரிக்காமல் மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுகோள்

ஈரோடு, ஜன. 14: பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.போகி பண்டிகையின்போது குப்பைகள், பழைய பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. எனவே, பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறுகையில்,`நம் முன்னோர்கள் பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆனால், தற்போது போகி பண்டிகையில் பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயல், டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிக்கிறார்கள். இதனால், காற்று மாசடைவதுடன் இதில் இருந்து வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்றவை ஏற்படும். மேலும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்கும் வகையில் புகையில்லா போகி கொண்டாட வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரிக்காமல் துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ெபாதுமக்கள் புகையில்லா போகி கொண்டாட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.

Tags : corporation employees ,bogie festival ,
× RELATED சென்னையில் அரசு போக்குவரத்துக் கழக...