சென்னிமலை முருகன் கோயிலில் மார்கழி மாத நிறைவு பூஜை

சென்னிமலை, ஜன.14: சென்னிமலை முருகன் கோயிலில் நடந்த மார்கழி மாத நிறைவு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலில் மார்கழி மாத விழா குழு சார்பில் 9ம் ஆண்டு மார்கழி மாத சிறப்பு பூஜை கடந்த மார்கழி மாதம் 1ம் தேதி துவங்கியது. அன்று முதல் தினமும் காலையில் 5 மணிக்கு கோமாதா பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. பின்னர், மார்கழி மாதத்தின் நிறைவு விழா சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு முதல் பூஜையாக கோமாதா பூஜை நடந்தது. பசுவுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, விநாயகர் வழிபாடு, கலச பூஜை, 108 சங்கு பூஜை ஆகியவை நடந்தது. மேலும், மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் எடுத்து வந்த தீர்த்தக்குடங்களுடன் சாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பின்னர், மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: