மது குடிக்க வீட்டு பத்திரத்தை அடமானம் வைக்க தந்தை மறுத்ததால் மகன் தற்கொலை

ஈரோடு, ஜன.14: மது குடிக்க வீட்டு பத்திரத்தை அடமானம் வைப்பதற்கு தந்தை மறுத்ததால் மனமுடைந்த மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.அந்தியூர் அடுத்துள்ள பூதப்பாடி சித்தகவுண்டனூரை சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் முருகன் (25). இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கூலி வேலை செய்து வந்த முருகனின் மனைவி கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த முருகன் குடிபோதைக்கு அடிமையானார்.வேலைக்கும் சரிவர செல்லாமல் பெற்றோர்களிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இந் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மது குடிக்க கையில் பணம் இல்லாததால் தனது பைக்கின் ஆர்சி புத்தகத்தை அடமானமாக வைத்து பணம் வாங்கி மது குடித்து வந்தார். தற்போது, மீண்டும் கையில் பணம் இல்லாததால் வீட்டின் பத்திரத்தை அடமானமாக வைத்து பணம் வாங்குவதற்காக தனது தந்தை கந்தசாமியிடம் வீட்டு பத்திரத்தை கேட்டார்.ஆனால், இதற்கு கந்தசாமி மறுத்தததால் மனமுடைந்த முருகன், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை எடுத்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முருகன் இறந்தார்.

Advertising
Advertising

Related Stories: