×

பொங்கல் பண்டிகையால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வெறிச்சோடியது

ஈரோடு, ஜன.14: பொங்கல் பண்டிகையையொட்டிமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பொதுமக்கள் குறைந்த அளவே வந்ததால்  நேற்று நேற்று கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் வாரந்தோறும் திங்கள்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பெற்று தீர்வு கண்டு வருகின்றனர்.ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் சில வாரமாக தேர்தல் விதிமுறை அமல்படுத்தப்பட்டதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு புகார் பெட்டி வைக்கப்பட்டது. தற்போது, தேர்தல் முடிந்த நிலையில் கடந்த வாரம் முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் துவங்கியது. ஆனால், கடந்த வாரத்தில் கூட்டம் குறைவாக இருந்தது. இந்த வாரம் பொதுமக்கள் மனு அளிக்க அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் வருகை குறைந்த அளவிலேயே வந்தனர். இதனால், கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. கூட்டத்தில், பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட நிலையில் எதிர்பார்த்த அளவிற்கு பொதுமக்கள் வராததால் மனுக்களின் எண்ணிக்கையும் குறைந்தது. வழக்கமாக 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவாகும். ஆனால், நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 168 மனுக்கள் மட்டுமே வந்தது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு அடுத்த வாரத்தில் இருந்து வழக்கமாக மனுக்கள் வழங்க பொதுமக்கள் வருவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : crowd ,Pongal ,
× RELATED பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழா...