கடந்தாண்டு சட்ட விரோதமாக மது விற்ற 3,800 பேர் கைது

ஈரோடு, ஜன.14:  ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வோரை மதுவிலக்கு போலீசாரும், உள்ளூர்  போலீசாரும் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், மாவட்டத்தில் கடந்தாண்டு அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்தல், தடை செய்யப்பட்ட வெளிமாநில மதுபானம், சாராயம், கள் விற்றல், சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டதாக மதுவிலக்கு போலீசாரால் 2,600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,650 பேர் கைது செய்யப்பட்டனர்.இதில் 35 பேர் பெண்கள். அவர்களிடம் இருந்து 21,358 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர, 60 லிட்டர் சாராய ஊறல், 1,050 லிட்டர் கள், கர்நாடக மதுபாட்டில் 1,400, புதுச்சேரி மதுபாட்டில் 130 கைப்பற்றப்பட்டன. மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் 3 உட்பட 64 வாகனங்கள் பறிமுதல் செய்யயப்பட்டன.இதேபோல், உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்களில் சட்ட விரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 1,170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,190 பேரை போலீசார் கைது செய்து, 5,900 மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர். கடந்தாண்டில் சட்டவிரோத மது விற்பனை, கடத்தல் செய்ததாக மொத்தம் 3,770 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,800 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 27,258 மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர்.

Related Stories: