வீட்டில் பதுக்கிய 1 டன் புகையிலை, குட்கா பறிமுதல்

திருச்சி, ஜன.14: திருச்சியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் புகையிலை மற்றும் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி - சென்னை பைபாஸ் சாலை தாராநல்லூர் பகுதியில், குட்கா-புகையிலை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர கமிஷனருக்கு தகவல் தெரியவந்தது. உடனடியாக கமிஷனர் உத்தரவின் பேரில் காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் சென்று தாராநல்லூர் பகுதியை சுற்றி சோதனை செய்தபோது அங்கு ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை-குட்கா பொருட்கள் வைத்துள்ளது தெரிய வந்தது. உடனடியாக அந்த வீட்டில் உள்ளவர்களை கைது செய்து சுமார் 1 டன் மதிப்பிலான புகையிலை மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
குட்காவை பதுக்கி வைத்த சிவக்குமார்(38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : house ,
× RELATED அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பறிமுதல்