தலைமறைவான அதிகாரிக்கு வலை தேர்தல் நடத்தை விதி முடிந்ததால்

திருச்சி, ஜன.14: திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததையடுத்து பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் தலைமையில் வழக்கம்போல் நடைபெற்றது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த 2ம்தேதி வாக்கு எண்ணிக்கையும், 11ம் தேதி மறைமுக தேர்தலும் நடைபெற்று முடிந்தது. வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி பொறுப்பேற்றுக்கொண்டனர். அதையடுத்து ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவடைந்ததை அடுத்து திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம்போல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சிவரசாசு தலைமை வகித்தார்.

Advertising
Advertising

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும் நிலம் தொடர்பான 72 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 10 மனுவும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட உதவிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 43 என மொத்தம் 335 மனுக்கள் பெறப்பட்டது. தேர்தல் முடிந்து முதல் கூட்டம் என்பதால் நேற்று கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால் மனுக்கள் குறைவாகவே வந்தது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் சிவராசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். டிஆர்ஓ சாந்தி, சமூகபாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பழனிதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: