போக்குவரத்து கழகம் ஏற்பாடு ஜன.17ல் ஒருநாள் மட்டும்

திருச்சி, ஜன.14: திருச்சி மாவட்டத்தில் வருகிற 17ம்தேதி ஒருநாள் மட்டும் பொதுமக்கள் பத்து ரூபாயில் 8 சுற்றுலாத்தலங்களை சுற்றுலா பேருந்து வரும் 17ம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு கூறியதாவது: தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலாத்தலங்களை பிரபலப்படுத்தவும், மக்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்திட்டத்தின்படி வரும் ஜனவரி 17ம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களை சுற்றிப் பார்ப்பதற்காக பத்து ரூபாய் கட்டணத்தில் பஸ் இயக்கப்பட உள்ளது. ஆரம்பிக்கப்பட்ட இடத்தில் இருந்து முடிவடையும் வரை பொதுமக்கள் பயணம் செய்யலாம். பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக தமிழ்நாடு ஓட்டல் அருகில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது. வெக்காளியம்மன் கோவில், மலைக்கோட்டை, ரங்கம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, திருவானைக்காவல், சமயபுரம், அண்ணா அறிவியல் மையம் ஆகிய 8 இடங்களுக்கு பத்து ரூபாய் கட்டணத்தில் ஒரு நாள் மட்டும் இப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை பஸ்கள் இயக்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.8 சுற்றுலாத் தலங்களை பார்க்க 10 ரூபாயில் சுற்றுலா பேருந்து வழக்கம்போல் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம் அனைத்து முக்கிய நகரங்களுக்கு 14ம் தேதி வரையும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறலாம் ராஜேஸ்கண்ணன் மற்றும் வங்கியில் வேலை செய்து வரும் பணியாளர்கள் போலியாக ஆவணங்கள் தயார் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

Related Stories: