×

குறைவான மனுக்களே வந்தது வாசுதேவனுடன் வனபோஜனம் அலங்காரம் தில்லைநகரில் ரூ.15 கோடியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் வாடகை கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

திருச்சி, ஜன.14: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருச்சி மாநகர் தில்லைநகரில் ரூ.15 கோடியில் கட்டப்படும் வணிக வளாகத்திற்கு வாடகைக்கு விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி கோ-அபிசேகபுரம் கோட்டம் வார்டு எண்.56க்குட்பட்ட தில்லைநகர் 7வது குறுக்கு சாலையில் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் ரூ.15 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வணிக வளாகம் 30698.28 சதுரஅடி இடப்பரப்பில் கீழ்வரும் பரப்பளவில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் தரை கீழ் தளம், தரைத்தளம், முதல்தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாம் தளம் என மொத்தம் 50275.34 ச.அடிக்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தினை முழுவதுமாகவோ அல்லது ஒவ்வொரு தளமாகவோ வாடகைக்கு எடுக்க விரும்பும் அரசுதுறைகள், தனியார் வணிக நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொதுப்பணித்துறை அரசின் வழிகாட்டி மதிப்பின்படி ஒரு சதுர அடிக்கு வாடகை ரூ.53 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ் விலையானது கட்டிடம் கட்டிமுடிக்கப்படும் காலம், கட்டிடத்தின் உட்கட்டமைப்பு மற்றும் சந்தை மதிப்பை பொறுத்து மாறுதலுக்குட்பட்டது. கட்டிடத்திற்கு பலர் விண்ணப்பிக்கும் பட்சத்தில் ஏலம் ஒப்பந்த புள்ளிகளின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து மாநகராட்சி சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு கட்டிடம் வாடகைக்கு விடப்படும். கட்டிடப்பணி நடைபெறுவதால் விண்ணப்பதாரரின் தேவைகளுக்கு ஏற்றப்படி கட்டிட அமைப்புகளில் மாற்றம் செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்.0431-2772098 என்ற எண்ணிலோ அல்லது கோ-அபிசேகபுரம் கோட்ட அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : rental shops ,Vasudevan ,Dillianagar ,
× RELATED மலைபோல் குவிந்து கிடக்கும் மனுக்கள்...