அதிகாரிகள் துணைபோவதாக குற்றச்சாட்டு சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் பழங்களில் மதிப்புகூட்டும் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

திருச்சி, ஜன.14: சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் பழங்களில் மதிப்புகூட்டும் பொருட்கள் தயாரிப்பு பயிற்சியில் விவசாயிகள் 50 பேர் பங்கேற்று பயனடைந்தனர். திருச்சி அருகே உள்ள சிறுகமணியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் அறிவியல் நிலையம் செயல்படுகிறது. இங்கு கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை பழங்கள் மற்றும் காய்கறிகளில் மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரித்தல் குறித்து 3 நாள் பயிற்சி நடந்தது. முதல் நாள் பயிற்சியில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் மதிப்புக்கூட்டும் பொருட்கள் மற்றும் அதற்காக பயன்படும் இயந்திரங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டாம் நாள் பயிற்சியில் கொய்யாவில் ெஜல்லி மற்றும் ஜாம் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மூன்றாம்நாள் சூரிய ஒளியில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்தும் நிலையத்திற்கு சென்று அதன் செயல்முறைகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பேராசிரியர் கலைமணி, அமுதசெல்வி, அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணைய பேராசிரியர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். திருச்சி பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், தொழில் முனைவோர்கள், பெண்கள் இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Related Stories: