திருச்சி போலீசார் நடவடிக்கை வனத்துறை நடவடிக்கை எடுக்குமா? திருச்சி மாவட்ட ஏஐடியூசி பொதுக்குழு கூட்டம்

திருச்சி, ஜன.14: ஏஐடியூசி திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் பெரியமிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் மூர்த்தி பேசினார். பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜா, மாவட்ட பொருளாளர் பாலமுருகன், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் பொதுச் செயலாளராக சுரேஷ், தலைவராக நடராஜா, துணைத் தலைவராக திராவிடமணி, செயலாளராக ராமராஜ் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், ‘ஏஐடியுசி தொழிற்சங்க நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த வரவேற்பு குழு அமைப்பது. நாடு முழுவதும் ஜன.8ல் நடந்த பொதுவேலை நிறுத்தத்தில் ஏஐடியுசி சிறப்பாக செயல்பட்டது. வெற்றிகரமாக வேலை நிறுத்தப்போராட்டம் நடந்தது. திருச்சி பெல் சங்க வேறுபாடுகளை கடந்து வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிய தொழிற்சங்க தலைவர்களை மிரட்டும் வகையில் பொய் வழக்கு போட்டு பழிவாங்க துணைபோகும் பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் முயற்சிகளை முறியடிப்பது’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: