×

தியாகராஜர் ஆராதனை விழாவில் நாளை பஞ்சரத்ன கீர்த்தனை ஆயிரக்கணக்கான இசைகலைஞர்கள் பங்கேற்பு

திருவையாறு, ஜன. 14: திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் நாளை பஞ்சரத்ன கீர்த்தனை நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்துகின்றனர். தஞ்சை மாவட்டம் திருவையாறில் திருவையாறில் தியாகராஜரின் 173வது ஆராதனை விழா கடந்த 11ம் தேதி துவங்கியது. விழாவை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு துவக்கி வைத்தார். இதைதொடர்ந்து தினம்தோறும் இசைநிகழ்ச்சி நடந்து வருகிறது. நாளை (15ம் தேதி) காலை 8.30 மணிக்கு மங்கள இசை நடக்கிறது. அதைதொடர்ந்து காலை 9 மணிக்கு விழா பந்தலில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துகின்றனர்.

முன்னதாக தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து தியாகராஜர் சிலை ஊர்வலமாக உஞ்சவர்த்தனி பஜனையுடன் புறப்பட்டு விழா பந்தலை அடைகிறது. அப்போது சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. அதைதொடர்ந்து இசைநிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஷேக் மகபூப் சுபானி, காலிஷா பீ மகபூப் ஆகியோரின் நாதஸ்வர நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லகில் தியாகராஜர் வீதியுலா காட்சி நடக்கிறது. இரவு 8.20 மணிக்கு கர்நாடக சகோதரர்கள் சசிகிரண், கணேஷ் ஆகியோரின் பாட்டும், இரவு 10 மணிக்கு கல்யாணபுரம் கணேசன், கார்த்திகேயன் ஆகியோரின் நாதஸ்வர நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை எஸ்பி மகேஸ்வரன் உத்தரவின்பேரில் திருவையாறு டிஎஸ்பி பெரியண்ணன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.

Tags : musicians ,Thyagaraja ,
× RELATED தியாகராஜர் கண்ட தெய்வீக தரிசனம்!