குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

தஞ்சை, ஜன. 14: கும்பகோணத்தில் குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார். கும்பகோணம் பழைய பாலக்கரையை ஓஎஸ்ஜே ஆப்தீன் நகரை சேர்ந்த சங்கர் (எ) சங்கர் கணேஷ் (33). இவர் தொடர்ந்து சாராயம் காய்ச்சி வந்தார். இதையடுத்து எஸ்பி மகேஸ்வரன் பரிந்துரையின்பேரில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணங்களின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் சங்கரை சிறையில் அடைக்க கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் சங்கர் அடைக்கப்பட்டார்.

Tags : Alcohol dealer ,
× RELATED கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மேலவீதி,...