11 பேர் மீது வழக்குப்பதிவு வாகனம் மோதி கலெக்டர் அலுவலக ஊழியர் பலி

ஒரத்தநாடு, ஜன. 14: ஒரத்தநாடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கலெக்டர் அலுவலக ஊழியர் பலியானார். திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள சீனி குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (53). திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 8ம் தேதி அதிகாலை தஞ்சையில் இருந்து தனது சொந்த ஊரான சீனி குடிக்காடு கிராமத்துக்கு பைக்கில் சென்றார். நெய்வாசல் சமத்துவபுரம் அருகே மன்னார்குடி செல்லும் சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த வாகனம், சிவசுப்பிரமணியன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதையடுத்து படுகாயமடைந்த அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவசுப்பிரமணியன் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிந்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags : Collector ,office employee ,road accident ,
× RELATED கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மேலவீதி,...