பொதுமக்கள் அவதி

சேதுபாவாசத்திரம், ஜன. 14: சேதுபாவாசத்திரம் கடற்கரை குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பையால் ஏற்படும் துர்நாற்றத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சேதுபாவாசத்திரம் கடற்கரை தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கக்கூடிய பொதுமக்கள் போக்குவரத்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பிரிந்து செல்லக்கூடிய சாலையை தான் பயன்படுத்த வேண்டும். இந்த சாலை வழியாக தான் சேதுபாவாசத்திரம் கடைவீதி மற்றும் பேருந்து நிறுத்தத்துக்கு பொதுமக்கள் வந்து செல்ல வேண்டும். ஆனால் இந்த சாலையை சுற்றிலும் அதிகளவில் கருவேல மரங்கள் காடுபோல் காட்சியளிக்கிறது. மேலும் இந்த சாலை ஓரங்களில் கடைவீதியில் உள்ள குப்பைகளை கொட்டப்படடுள்ளது. மேலும் இந்த சாலையில் உள்ள மின்விளக்குகள் எரிவது கிடையாது. இரவு நேரங்களில் இருள்சூழ்ந்த இந்த சாலையின் வழியாக செல்லும் பொதுமக்களை பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் கடிக்கும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக இந்த பகுதியை சுத்தம் செய்து தெருவிளக்குகள் பொருத்துவதுடன் குப்பைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : public ,Avadi ,
× RELATED மக்கள் நேர்காணல் முகாமில் பொதுமக்களுக்கு நலஉதவி