கும்பகோணம் பொற்றாமரை குளத்தை தூய்மைப்படுத்தி நீர் நிரப்ப வேண்டும்

கும்பகோணம், ஜன. 14: கும்பகோணம் பொற்றாமரை குளத்தை தூய்மைப்படுத்தி தண்ணீர் நிரப்ப வேண்டுமென சமையல் தொழிலாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கும்பகோணத்தில் சமையல் தொழிலாளர் முன்னேற்ற சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகி கோபாலகிருஷ்ணன் பங்கேற்று ஏழை மற்றும் நலிந்த சமையல் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வழங்கினார். கூட்டத்தில் துர்நாற்றம் வீசும் பொற்றாமரை குளத்தை தூய்மைப்படுத்தி புதிதாக தண்ணீர் நிரப்ப வேண்டும். கும்பகோணம் நகராட்சி பகுதியில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சீரமைக்க வேண்டும். நகராட்சி பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வார வேண்டும். மேலும் குளங்களை சீரமைக்க வேண்டும். காவிரி ஆற்றின் ஓரத்தில் குப்பை கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் 24 மணி நேரமும் சுகாதார வளாகத்தை திறந்து வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

Tags : pond ,Kumbakonam Pottamarai ,
× RELATED குளத்தில் மூழ்கி முதியவர் சாவு