கிராம பகுதிகளில் விழாக்கோலம் மயில்கள் வேட்டையாடிய 3 பேர் துப்பாக்கியுடன் கைது

புதுக்கோட்டை, ஜன.14:புதுக்கோட்டை அடுத்த வயலோகத்தில் மயில்கள் வேட்டையாடிய 3 பேர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் போலீசார் வயலோகம் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே மூன்று பேருடன் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஒரு சாக்குபையில் ரோமம் பிடுங்கப்பட்டு இறந்த நிலையில் மறைத்து வைத்திருந்த 3 மயில்கள் மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த மூன்று பேரையும் அன்னவாசல் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள நகரப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (26), பெருமாள் (25), மூர்த்தி (26) என்று தெரியவந்து. இதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் மயில் வேட்டைக்கு பயன்படுத்திய ஒரு நாட்டு துப்பாக்கி, கைப்பேசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த அன்னவாசல் போலீசார், மயிலை உணவுக்காக வேட்டையாடினார்களா அல்லது மருத்துவத்துக்காவா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : areas ,
× RELATED வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர்...