×

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 200 கிலோ பறிமுதல்

அறந்தாங்கி, ஜன.14: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து அறந்தாங்கி நகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் ஆணையர் பொறுப்பு முத்துகணேஷ் அறிவுறுத்தலின்படி நகராட்சி எல்லைக்குள் சுகாதார ஆய்வாளர், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் முன்னிலையில் 1725 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 21 கடைகளில் பழக்கடை மற்றும் மீன் கடை, கோழிக்கடைகளில் 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.14 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டு நகராட்சி கருவூலத்தில் செலுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அல்லது விற்பனை செய்தாலோ உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா