ரூ.14 ஆயிரம் அபராதம் அன்னவாசல் ஒன்றியத்தில் பெண் கவுன்சிலர் கடத்தலா?

புதுக்கோட்டை, ஜன.14: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த காங்கிரஸ் பெண் கவுன்சிலரை திமுகவினர் கடத்தி சென்றுறதாக பெண் கவுன்சிலர் அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அன்னவாசல் ஒன்றியத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 9 இடங்களையும், திமுக 10 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றது. ஒன்றியக் குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் நடந்த தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தலில் வந்த காங்கிரஸ் பெண் கவுன்சிலர் ஜெயம் தங்கவேல் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தவுடன் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனை அடுத்து மறைமுக தேர்தலில் அவர் வாக்களிக்கவில்லை. இதனையடுத்து அதிமுக சார்பில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு ராமசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வாக்களித்த 19 பேர்களில் ஒரு வாக்கு செல்லாதவை. இதனால் அதிமுக 9 திமுக 9 வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் அதிமுக கவுன்சிலர் ராமசாமி ஒன்றியக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் துணைத் தலைவர் பதவி தேர்தலில் கவுன்சிலர்கள் அதிக அளவு வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராமசாமி நேற்று ஒன்றிய அலுவலகத்தில் பொறுப்பேற்றார். இந்நிலையில் வாக்களிக்காத காங்கிரஸ் பெண் கவுன்சிலர் ஜெயம் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார். இதனையடுத்து அவர் அன்னவாசல் காவல் நிலையத்தில் தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் வந்து புகார் அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தலில் வெற்றி பெற்ற என்னை திமுகவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் சந்திரன் மற்றும் வடக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் காரில் கடத்தி சென்றனர் என்று புகார் தெரிவித்துள்ளார்.

Tags : councilor ,
× RELATED கொசப்பூர் மயான பூமி சீரமைப்பு