பொன்னமராவதி பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா

பொன்னமராவதி, ஜன.14: பொன்னமராவதி பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப்பொங்கல் விழா நடந்தது. பொன்னமராவதியில் உள்ள வலையபட்டி சிதம்பரம் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி முதல்வர் முருகேசன தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் பொங்கல் கூடை எடுத்து ஊர்வலமாகச் சென்று பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்தனர். அப்போது மாணவ, மாணவிகள் கும்பிஅடித்தல், கராத்தே, பாடல், மாறுவேடம், சிலம்பம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினர். இதில் பள்ளி நிர்வாக அலுவலர் சந்திரன், துணை முதல்வர்கள் வைதேகி, கலைமதி மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதேபோல மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது. இதில் மாணவிகள் பொங்கல் வைத்தும், மாணவ, மாணவிகள் பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தினர்.

Tags : Equality Pongal Festival ,Ponnamaravathi School ,
× RELATED புனித லூர்தன்னை ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா