×

வீட்டு வாசலை சுத்தம் செய்த பெண்ணிடம் 12 பவுன் பறிப்பு

புதுக்கோட்டை, ஜன.14: புதுக்கோட்டையில் வீட்டு வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 12 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை சார்லஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (60). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவரது மனைவி மீனா (55). இவர் நேற்று அதிகாலையில் தனது வீட்டின் முன்பு உள்ள குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மீனாவின் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மீனா, விஜயகுமார் ஆகியோர் சேர்ந்து மர்ம நபர்களிடம் இருந்து தங்கசங்கிலியை மீட்க முயற்சி செய்தார். இருப்பினும் அவர்கள் தம்பதியை தாக்கிவிட்டு 12 பவுன் தங்கசங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதில் காயமடைந்த விஜயகுமார், மீனா ஆகியோர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : cleaning house ,
× RELATED தாம்பத்திய குறைபாட்டை மறைத்து...