×

புதுகை அடுத்த ஆலங்குடி நகரில் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் டூவீலர்களால் போக்குவரத்து நெரிசல்

புதுக்கோட்டை, ஜன.14: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனங்களை சாலையில் ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்வதால் அவ்வப்போது நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிறமத்திற்குள்ளாகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை போலீசார் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி அதிக அளவில் வர்த்தகம் நடக்கும் இடமாக உள்ளது. இதனால் ஆலங்குடி நகர் பகுதியில் முக்கிய வீதிகள் எப்போதும் மக்கள் நடமாட்டம் சற்று அதிக அளவில் இருக்கும். இந்த பகுதிக்கு வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர்கள் முறையாக பார்கிங் ஏரியாவிலோ நிறுத்துவதில் சாலை ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் சாலையில் ஒரே நேரத்தில் இரு புரத்திலும் பேருந்துகள் வரும்போது அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நகர் பகுதியில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகுந்த வேதனையடைந்து வருகின்றனர். குறிப்பாக காலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள், அலுவலத்திற்கு செல்வோர் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்னர். குறிப்பாக ஆலங்குடி புதிய பேருந்து செல்லும் இடம், வங்கிகளுக்கு செல்லும் வழி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் இந்த பகுதியில் உள்ள வணிக நிறுவணங்களுக்கு வருபவர்கள் தங்கள் கொண்டு வரும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பார்ங்கி ஏரியாவில் நிறுத்தாமல் அவர்கள் செல்லும் கடைகளுக்கு முன்பு நிறுத்திவிட்டு செல்கின்றனர். ஒரு வாகனம் நிறுத்தினால் பிரச்னையில்லை.

கடைக்கு வரும் அனைத்து வாகனங்களும் கடைக்கு முன்னால் நிறுத்த முயற்சி செய்யும்போது அங்கு போதிய இடமில்லாமல் சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இவ்வாறு இரு புரத்திலும் நிறுத்தும்போது நான்கு சக்கர வாகனம் செல்லும் அவளவிற்கு சாலை மறிக்கப்படுகின்றது. இதனால் இரு வழிசாலையாக இந்த சாலைகள் தற்போது ஒரு வழி சாலைபோல் மாறிவிடுகிறது. இதனால் ஒரே நேரத்தில் வாகனங்கள் வந்தால் சாலையில் போதிய வழியின்றி அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் பொதுமக்கள் மிகுந்த துண்பங்களை அனுபவித்து வருகின்றனர். ஒருசில கடைகளில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும் கனரக வாகனங்கள் வரும்போது சுமார் ஒரு மணி நேரம் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகர் பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மாலை நேரங்களில் குடிமகன்களின் முறையற்ற வாகன நிறுத்தத்தால் அந்த பகுதியில் தினசரி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். இதனால் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
ஆலங்குடி நகரின் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளுக்கு வருவோர்கள் கடைக்கு செல்வதால் ஆங்காங்கே சாலையின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிறமங்களை அனுபவித்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். குறிப்பாக மாலை காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்கவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை போக்குவரத்து போலீசார் கண்டுகொண்டதாக தெரியவில்லை. வாகனகளை பிடித்து பிடித்து அபராதம் விதக்கும் போலீசார் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பிடித்து அதற்கு தகுந்த அபரதாம் விதிக்க தொடங்கினால் வாகன ஓட்டிகள் கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்லமாட்டார்கள்.

போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. இதற்கு போக்குவரத்து போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் போக்குவரத்து போலீசார் அதனை கண்காணித்து சரிசெய்ய வேண்டும். ஆனால் ஆலங்குடி நகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்பபோது அந்த பகுதியில் ரோந்து சென்று போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும். ரோந்து செல்லும்போது போக்குவரத்திற்கு இடஞ்சலாக இருக்கும் வாகனங்களின் உரிமையளர்களுக்கு மைக் மூலம் எச்சரிக்கை விடுவார்கள் . இதன் பிறகும் வாகனத்தை எடுக்கவில்லை என்றால் சர்வீஸ் வேன் மூலம் அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகு அந்த வாகன உரிமையளருக்கு போதிய அபராதம் விதிக்க வேண்டும். இது போன்ற பணிகள் நடப்பதாக தெரியவில்லை என்றனர்.

Tags : town ,Alangudi ,
× RELATED பொறுப்பேற்பு