போலீசார் மெத்தனம் திருமயம் அடுத்த அரிமளத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

திருமயம், ஜன.14: அரிமளம் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடபட்டு, விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து படைத்து பின்னர் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி விளையாட்டரங்கில் பள்ளி மாணவர்களுக்கிடையே தமிழக மக்களின் பெருமையை பறை சாற்றும் விதமாக தமிழர் பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகளான கோலப்போட்டி, சிலம்பம், கபாடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பள்ளி நிறுவனர் தங்கவேல், தாளாளர் சபரி, தாய் கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளை செயலாளர் நிவாஷினி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

Tags : Eelam Pongal Celebration ,
× RELATED அரிமளம், திருமயம் பகுதி விவசாயிகள்...