இன்ஜினியரை தாக்கிய வியாபாரி கைது

பெரம்பலூர், ஜன. 14: பெரம்பலூரில் இன்ஜினியரைத் தாக்கிய டீ வியாபாரியை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்த லிங்கண்ணன் மகன் ஆனந்த்(37). இன்ஜினியர். இவர், பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டிடக் கட்டுமானப் பணிகளை மேற் கொண்டுவருகிறார்.இவருடன் கட்டிட வேலை செய்பவர்களுக்கு, பெரம்பலூர் நகராட்சி 7வதுதெரு பாரதிதாசன் நகரைசேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் காளிதாஸ்(35) என்பவர் அடிக்கடிஇருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து டீ கொடுத்து வந்ததில், காளிதாஸு க்கு ஆனந்த் கொடுக்க வே ண்டிய பணம் 358 ரூபாய் கடந்த 1மாத காலமாக நிலு வையில் உள்ளது. இந்நிலையில் நேற்று 12ம் தேதி 7.45 மணியளவில் எளம்பலூர் ரோடு சூப்பர் மார்க்கெட் அருகில் பாக்கி பணம்கேட்டு ஏற்பட்ட தகராறில், காளிதாஸ் ஆனந்தை கல்லால் தாக்கியதில், (தலையின்) இடது பக்கம் காயம் ஏற்பட்டு, பெரம்பலூர் தனலட்சுமிசீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் உள்நோயாளி யாக சிகிச்சைபெற்று வருகிறார். இது சம்பந்தமாக பெரம்பலூர் எஸ்ஐ வினோத்கண்ணன் வழக்குப்பதிவு செய்து காளிதாஸ் என் பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags : Dealer ,engineer ,
× RELATED உடல் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் இளநீர் வியாபாரி