×

134 பேர் பங்கேற்பு: 11 பேர் ஆப்சன்ட் ஊதுபத்தி விற்கும் மாற்றுத்திறனாளிக்கு அரசு வேலை வழங்கப்படுமா? புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்ட எதிர்ப்பு

அரியலூர்,ஜன.14:அரியலூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரத்னா தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 107 மனுக்கள்பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதில், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நேற்று கலெக்டரிடம் , செந்துறை அருகேயுள்ள புதுப்பாளையம் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது- எங்கள் கிராமத்தை சுற்றி ஏற்கனவே தனியார் சிமென்ட் ஆலைக்கு சொந்தமான 3 சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. இந்நிலையில், தற்போது புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்ட அதே தனியார் சிமென்ட் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், எங்கள் கிராமம் தண்ணீரின்றி அழியும் சூழலுக்கு தள்ளப்பட உள்ளது. எனவே, இந்த புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைப்பதை தடுக்க வேண்டும். ஏற்கனவே, தோண்டப்பட்டு காலாவதியான சுரங்கங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மாட்டு வண்டி மணல் குவாரி கேட்டு தொழிலாளர்கள் மனு:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், ஆண்டிமடம் அருகேயுள்ள வெள்ளாற்றில் மாட்டு வண்டி மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, மாற்று இடத்தில் மணல் குவாரி செயல்படும் எனக்கூறி அந்த மணல் குவாரி மூடப்பட்டது. 3 மாதங்கள் ஆகியும் மாற்று இடத்தில் மணல் குவாரி தொடங்கப்படவில்லை. இதனால், சுமார் 300-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாற்று இடத்தில் மாட்டு வண்டி மணல் குவாரியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி துணை ஆட்சியர் ஏழுமலை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Participants ,offspring salesman ,
× RELATED வயது முதிர்ந்தவர்கள்,...