ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

தா.பழூர், ஜன. 14: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களின் சமத்துவத்தை வளர்க்கும் விதமாக சமத்துவ பொங்கல் விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் கலியபெருமாள், ராசாத்தி தலைமை வகித்தனர். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. தா.பழூர் ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாலதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பிளமின்ராஜ் மற்றும் சக ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். பள்ளி ஆசிரியர் ஐயப்பன் நன்றி கூறினார்.

Tags : Equality Pongal Festival ,Panchayat Union Elementary School ,
× RELATED புனித லூர்தன்னை ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா