×

கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் குடிநீர் குழாயில் உடைப்பு சின்னாண்டாங்கோவிலில் தண்ணீர் தேங்கி பாதிப்பு

கரூர், ஜன. 14: குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக சின்னாண்டாங்கோவில் லட்சுமிபுரம் பகுதியில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது. கரூர் பழைய பைபாஸ் சாலை சின்னாண்டாங்கோவில் பிரிவு சாலை எதிர்புறம் லட்சுமிபுரம் பகுதி உள்ளது. ஏராளமான குடியிருப்புகள் இந்த பகுதியில் உள்ளன. கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையின் மையப்பகுதியில் குடிநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதோடு வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு குடிநீர் குழாய் உடைப்பினை விரைந்து சரி செய்ய தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : meeting ,office ,Collector ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...