×

கரூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல் அய்யர்மலையில் ரோப்கார் அமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்

குளித்தலை, ஜன. 14: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை புறவழிச் சாலை மற்றும் முசிறி குளித்தலை மாநில நெடுஞ்சாலைகளிலும் சந்திக்கும் இடம் குளித்தலை சுங்க கேட் அருகில் முறையாக இணைப்பு சாலை இல்லாததால் மூன்று கிலோமீட்டர் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் நகரத்திற்குள் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

அதனால் உடனடியாக குளித்தலை முசிறி மாநில நெடுஞ்சாv0லை, திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை புறவழிச்சாலையில் இணைப்பு சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும். அய்யர்மலை கிரிவல பாதையை கான்கிரீட் சாலையை தார் சாலையாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும். அய்யர்மலை ரோப் கார் பணி மிகவும் மந்தமாக 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரோப்கார் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் குளித்தலை நகராட்சி பகுதியில் பல கல்லூரி மற்றும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இருப்பினும் குளித்தலை பகுதி மாணவர்களுக்கு இளைஞர்களுக்கும் விளையாட்டு மைதானம் என்பது கிடையாது. குளித்தலை கல்வி மாவட்டமாக தரம் உயர்ந்தும் விளையாட்டு மைதானம் இல்லாததால் இப்பகுதி மாணவர்கள் இளைஞர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். அதனால் குளித்தலை நகரப்பகுதியில் மாணவர்களின் விளையாட்டுத் திறன் வளர்க்கும் வகையில் விளையாட்டு மைதானம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Tags : Karur ,district ,Ayyarmalai ,Robkar ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்