விழாவை கொண்டாட கிராம மக்கள் ஆயத்தம் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

நாகை, ஜன.14: நாகை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரவீன்பிநாயர் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 9 மனுக்களும், பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 110 மனுக்கள் என மொத்தம் 119 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் பிரவீன்பிநாயர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
டிஆர்ஓ இந்துமதி, தனித்துணை கலெக்டர் ராஜன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED குறைகளை வரும் 2ம் தேதிக்குள்...