119 மனுக்கள் குவிந்தன நாகை கலெக்டர் அலுவலகத்தில்

நாகை, ஜன.14: தினகரன் செய்தி எதிரொலியால் நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயற்கை பேரிடர் மேலாண்மை தொடர்பான விளம்பர பலகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயற்கை பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு மற்றும் இயற்கை பேரிடர் ஏற்படும் போது தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்களின் செல்போன் அடங்கிய விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பர பலகையில் கலெக்டர், எஸ்பி, டிஆர்ஓ உள்ளிட்ட அதிகாரிகளின் நாகை மாவட்டத்தில் இருந்து இடமாறுதல் அடைந்தும் அவர்களின் பெயர் மற்றும் செல் எண்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இயற்கை பேரிடர் நிறைந்த மாவட்டமான நாகை மாவட்டத்தில் இவ்வாறு அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் செல் எண்கள் மாற்றம் செய்யப்படாமல் இருந்தால் கலெக்டர் அலுவலகம் வருவோர்கள் இந்த செல் எண்களை குறித்து கொண்டு இயற்கை பேரிடர் ஏற்படும் போது தகவல் தெரிவிப்பார்கள். ஆனால் அதிகாரிகள் இடமாற்றம் அடைந்து இருப்பதால் தகவல் கிடைப்பது கடினமாகும் என்று கடந்த 3 மாத காலத்திற்கு முன்பு தினகரன் நாளிதழில் செய்தி மற்றும் படம் வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களது செல் எண் அடங்கிய விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

Tags : Naga Collector Office ,
× RELATED தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 390 மனுக்கள் குவிந்தன