நாகை மாவட்டத்தில் 16, 26ம் தேதிகளில் டாஸ்மாக் விடுமுறை

நாகை, ஜன.14: திருவள்ளுவர் தினம், குடியரசு தினத்தினை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் வரும் 16 மற்றும் 26 ஆகிய இரண்டு தினங்கள் விடுமுறை விடப்படும் என்று கலெக்டர் பிரவீன்பி நாயர் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தினை முன்னிட்டு வரும் 16 மற்றும் 26 ஆகிய இரண்டு தினங்களில் நாகை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் ஆகியவற்றை மூடி வைக்க வேண்டும். மேலும் மேற்கண்ட தினங்களில் மதுபானம் விற்பனையும் செய்யக்கூடாது. மீறினால் மதுபானம் விதி முறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Tasmaq Holidays ,Naga District ,
× RELATED மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்...