மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தல் ஏவிசி கல்வி நிறுவனங்களின் சமத்துவ பொங்கல் விழா

மயிலாடுதுறை, ஜன.14: மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்வி நிறுவனங்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி அரங்கில் தமிழர்களின் மரபுபடி பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் செயலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் ராஜசேகரன், ராகவன், மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவ-மாணவிகளும் பேராசிரியர்களும் செங்கரும்பு, பச்சரிசி, மஞ்சள், இஞ்சி ஆகிய கொத்துகள் கட்டபட்ட மண் பானையில் சமத்துவ பொங்கல் வைத்து தமிழர்களின் கலாச்சார மரபுபடி சூரியனுக்கு படைத்து கொண்டாடினர். இதனையடுத்து கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, நாடகம், கிராமிய பாடல்கள், மேற்கத்திய நடனம், என்சிசி மாணவர்களின் சாகச நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற்றது. இதில் ஏவிசி கல்லூரி முதல்வர் நாகராஜன், பொறியியல் கல்லூரி முதல்வர் சுந்தர்ராஜ், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கண்ணன், பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் செந்தில்முருகன், டீன் கல்வி முனைவர் பிரதீப், பாலிடெக்னிக் கல்லூரி இயக்குநர் வளவன், பொறியியல் கல்லூரி துணை முதல்வர் செல்வமுத்துகுமரன், டீன் மயில்வாகணன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஏவிசி கல்வி நிறுவனங்களை சேர்ந்த பேராசிரியர்கள், பணியாளர்கள மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags : Mayiladuthurai ,AVC Educational Institutions ,
× RELATED மயிலாடுதுறையில் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு