×

விவேகானந்தர் பிறந்த நாள் ெகாண்டாட்டம்

நீடாமங்கலம்,ஜன.14: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்துஸ்தான் தேசிய மக்கள் இயக்கம் சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள், தேசிய இளைஞர் தினம் லட்சுமி நாராயண சாமி கோயிலில் பரம்பரை அறங்காவலர் சுரேஷ் தலைமையிலும் கோபு முன்னிலையிலும் நடந்தது.விஜய் வரவேற்றார்.அங்கு வைக்கப்பட்டிருந்த விவேகானந்தர் உருவப்படத்திற்கு நிர்வாகி குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நூலகர் ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மணி நன்றி கூறினார்

Tags : Vivekananda Birthday Celebration ,
× RELATED விவேகானந்தர் பிறந்த நாள் விழா