×

முன்விரோத தகராறில் இந்திய கம்யூ. செயலாளர் உள்பட 14 பேர் மீது வழக்கு

நீடாமங்கலம்,ஜன.14: நீடாமங்கலத்தில் முன்விரோதம் காரணமாக நடந்த சண்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அண்ணாசிலை அருகில் மன்னார்குடி சாலையில் வசித்து வருபவர் கணபதி மகன் சேகர்(50). இவர் நீடாமங்கலம் வர்த்தகர் சங்க துணைச்செயலாளராக உள்ளார்.சேகர் கடந்த 11ம் தேதி மாலை கோரையாறு பாலம் தென்கரைஅருகில் ஒரு மெக்கானிக்கடையில் இருந்துள்ளார். அப்போது ஒளிமதி கிராமத்தைச்சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேசதமிழார்வன்,அவரது மகன் வழக்கறிஞர் ஸ்டாலின்பாரதி,அவரது உறவினர் வீரபாண்டியன், சித்தமல்லி இளையரசன் ஆகியோர் காரில் வந்து இறங்கி சேகரை திட்டி கொலை செய்து விடுவோம் என கம்பி,கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலை மறித்த போது வலது கையில் ஏற்பட்ட காயத்தில் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேகர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சேகர் நீடாமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் மேலே உள்ள 4பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று சித்தமல்லியை சேர்ந்த இளையரசன் நீடாமங்கலம் போலீசில் கொடுத்த புகாரில் நானும் ,ஒளிமதி கிராமத்தை சர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின்பாரதி இருவரும் கோரையாறு தென்கரையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்றோம் அப்போது சேகர் உள்ளிட்ட 10 பேர் நாங்கள் சென்ற வாகனத்தை மறித்து உன்னை கொலை செய்து விடுவேன் என்று திட்டியதாக கொடுத்த புகாரில் வர்த்தகர் சங்க துணைச்செயலாளர் சேகர் உள்ளிட்ட 10 பேர் உள்ளிட்ட 14 பேர் மீது நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் சுப்பிரியா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.சேகருக்கும்,நடேசதமிழார்வனுக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...