×

முத்துப்பேட்டை பகுதியில் மின்வாரிய கணக்கெடுப்பில் குளறுபடி நடவடிக்கை எடுக்க வர்த்தகர்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை, ஜன.14: முத்துப்பேட்டையில் மின்சாரவாரியம் குடியிருப்புகள் மற்றும் கடைகளில் மீட்டர் ரீடிங் எடுப்பதில் குளறுபடி ஏற்பட்டு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதை தவிர்க்க மின்வாரிய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வர்த்தக கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வர்த்தகக் கழக மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைவர் மெட்ரோ மாலிக் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ராஜாராம் மாதாந்திர செயல் அறிக்கை வாசித்தார். முன்னதாக துணைத்தலைவர் கண்ணன் வரவேற்றார். கூட்டத்தில் சங்க செயல்பாடுகள் மற்றும் வியாபாரிகள், ஊரின் முக்கிய பிரச்னைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முத்துப்பேட்டை பகுதியில் மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணி செய்யும்போது பெருபாலும் வியாழக்கிழமை நாட்களில் செய்வதால் அன்றைய தினம் சிரமங்கள் மற்றும் வியாபாரம் பெரியளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

ஆகவே வியாழன்கிழமையை தவிர்த்து மற்ற நாட்களில் கடைபிடிக்க வேண்டும். முத்துப்பேட்டை பேரூராட்சியில் பகுதியில் சில மாதங்களாக தெரு விளக்குகள் எரியாமல் இரவில் இருண்டு கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள் இரவில் செல்ல அச்சம் ஏற்பட்டு வருவதுடன் இரவில் இதனை சாதகமாக சமூக விரோதிகள் பயன்படுத்திக் கொண்டு அதிகளவில் திருட்டு மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது. ஆகவே பேரூராட்சி நிர்வாகம் இதனை உடன் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து எரியவிட வேண்டும், முத்துப்பேட்டை மின்சாரவாரியம் குடியிருப்புகள் மற்றும் கடைகளில் மீட்டர் ரீடிங் எடுப்பதில் குளறுபடி ஏற்பட்டு கூடுதல் கட்டணம் கட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனை தவிர்க்க மின்வாரிய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் துணை செயலாளர்கள் கிஷோர், அருண் சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் அசோகன், அந்தோணிராஜா, சகாப்தீன், பேட்டை ராஜேஷ் கண்ணா, தியாகு, விவேக் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். முடிவில் சங்கத்தின் தேர்தல் ஆணையர் மாரிமுத்து நன்றி கூறினார்.

Tags : Merchants ,area ,Muthupettai ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...