×

நுண்ணீர்பாசன திட்டத்தை ஊக்கப்படுத்தும் துணைநீர் பாசன மேலாண்மை திட்டம்

வலங்கைமான்,ஜன.14: வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இரு மடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் பெற விவசாயிகளுக்கு பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசன கருவிகள், தெளிப்பு நீர் பாசன கருவிகள் மற்றும் மழைத்தூவான் மானியத்துடன் வேளாண்மை துறையால் தொடர்ந்து வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் மைல் கல்லாக விவசாயிகளின் நலன் கருதி நுண்ணீர் பாசன திட்டத்தை ஊக்கப்படுத்தும் துணை நீர்பாசன மேலாண்மை திட்டம் அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பாசன கருவிகள் நுண்ணீர் பாசன திட்டத்தில் அதாவது அரசு இலவசமாக வழங்கும் 2.5” பைப் வாங்குவோருக்கு மட்டுமே இத்திட்டத்துடன் இணைத்து கீழ்கண்ட இனத்திற்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது.

டீசல் மோட்டார் மின்மோட்டார் வாங்க ரூ.15 ஆயிரம் மான்யம் தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் (பிவிசி பைப்) வாங்க ரூ.10 ஆயிரம் மான்யம் தரைமட்ட நீர் சேமிப்பு தொட்டி அமைக்க ரூ. 40 ஆயிரம் மான்யம் பின்னேற்பாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ள விவசாயிகள் கணினி சிட்டா, நில வரைப்படம், இரண்டு புகைப்படம், ரேஷன் கார்டு அட்டை நகல், ஆதார் அட்டை நகல், மற்றும் வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களிடம் பதிவு செய்ய மேற்கண்ட நுண்ணீர் பாசன திட்டத்தை ஊக்கப் படுத்தும் துணை நீர் பாசன மேலாண்மை திட்டத்தை பயன்படுத்தி பயன் பெற இதுவே நல்ல தருணம்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு