×

கால அவகாசம் 2 நாள் நீட்டிப்பு பொங்கல் பண்டிகையையொட்டி முத்துப்பேட்டையில் பனங்கிழங்கு விற்பனை மும்முரம்

முத்துப்பேட்டை, ஜன.14: முத்துப்பேட்டையில் தற்பொழுது “பனங்கிழங்கு” பொங்கல் நேரத்தில் விற்பனைக்காக அதிகளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்து பொங்கல் பண்டிகை நாளில் மஞ்சள்கொத்து கரும்போடு படையலில் இடம்பெற்ற “பனங்கிழங்கை” பெரும்பாலானோர் மறந்து விட்டனர். அதேபோல் பொங்கல் நேரத்தில் பனை மரங்கள் மீது ஆர்வம் குறைந்து விட்டது நாளடைவில் பனங்கிழங்கு வரத்து சீசன் குறைவாக போனதால் அதனை அப்படியே பொங்கல் பட்டியலில் வைப்பதையும் தவிர்த்து விட்டனர். அதனால் பழமையும் பெருமையும் மருத்துவ குணமும் நிறைந்த பனங்கிழங்கு இன்று “நொறுக்குத்தீனி”யாக மாறிவிட்டது. உடலுக்கு கேடு விளைவிக்கும் தீனி பொட்டலங்கள் பகட்டாக விற்பனைக்கு வந்துள்ள காலகட்டத்தில் சத்துமிக்க பனங்கிழங்கு மட்டும் சாலையோர கடைகளில் கட்டுகட்டாக குவிந்து கிடக்கிறது. இவற்றின் அருமை தெரிந்தோர்மட்டுமே அதனை விரும்பி வாங்கிச்செல்லும் பொருளாக மாறிவிட்ட பனங்கிழங்கு கிராம மக்கள் பயன்பாட்டில் இன்றளவும் இனிப்போடு உள்ளது.

இதை நீர்விட்டு அவித்தும், அவிக்காமல் வெயிலில் உலர்த்தி “ஒடியல்” என சேகரிக்கப்படும் கிழங்கானது நீண்டகாலம் கெடாமலிருக்கும். இந்த ஒடியலை இடித்து பிட்டாகவும் கூழாகவும் நம் முன்னோர்கள் உணவாக பயன்படுத்தியுள்ளனர். நிலத்தில் ஊடுருவும் பனைவிதை வேரில் சேமிக்கப்படும் மாவுச்சத்தே நமக்கு பனங்கிழங்காக கிடைக்கிறது. மருத்துவ பயனை உள்ளடக்கிய பனங்கிழங்கு குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரைக்கும் பயன்தரக்கூடியது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் பனங்கிழங்கு உணவு பொருளாக பயனில் உள்ளது. ஆனாலும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் படையலில் இருந்து எப்படியோ பனங்கிழங்கு விடுபட்டு விட்டது. உடல் நலனுக்கும் மலச்சிக்கலுக்கும் ஒப்புவுயர்வற்றதாய் நிலத்திலிருந்து கிடைக்கும் கிழங்கமிர்தமான பனங்கிழங்கை நடப்பு பொங்கல் நாளிலிருந்தாவது வழக்கத்துக்கு கொண்டு வரவேண்டும். இதனால் ஆரோக்கியம் பெருகுவதோடு இதை நம்பி பிழைத்து வரும் விவசாய தொழிலாளர்குடும்பமும் உயர்வு பெறும். எந்த வருடமும் இல்லாத அளவில் இந்த வருடம் பொங்கல் நாளில் முத்துப்பேட்டையில் பலஇடங்களில் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். அதனை மக்கள்ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். அவித்த கிழங்கு கொண்ட ஒரு கட்டு ரூ 20 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் அவிக்காத பச்சை கிழங்கும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனையில் கிராம பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : festival ,Muttupettai Panampattikkkkkku ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...