ஆம்பூரில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா

ஆம்பூர், ஜன.13: ஆம்பூரில் நேற்று விவேகானந்தர் பிறந்த நாள் விழா கொண்டாடபட்டது. ஆம்பூர் பைபாஸ் சாலை விஜய வினாயகர் கோயில் அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று விவேகானந்தர் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. மாநில செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாணவரணி மாநில செயலாளர் கோபிநாதன் முன்னிலை வகித்தார். பின்னர், விவேகானந்தர் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: