ஜோலார்பேட்டை அருகே துணிகரம் அம்மன் கோயில் பூட்டு உடைத்து 3 சவரன் நகை, பணம் திருட்டு மர்ம ஆசாமிகள் கோரிக்கை

ஜோலார்பேட்டை, ஜன.13: ஜோலார்பேட்டை அருகே அம்மன் கோயில் பூட்டை உடைத்து 3 சவரன் தாலி மற்றும் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் கனக நாச்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுகிறது. மேலும் தினமும் காலையில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை கோயில் பூசாரி மாரியப்பன், பூஜைகள் முடிந்தபிறகு கோயிலை பூட்டிவிட்டு சென்றார். இதையடுத்து நேற்று காலை கோயிலை திறக்க வந்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவத்தை ஊர் கவுண்டரான முனிசாமியிடமும் ஊர் பொதுமக்களிடமும் தெரிவித்தார்.

அவர்கள் கோயிலுக்குள் சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க தாலி, கோயிலின் உள்ளே வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது ெதரிந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய ேபாலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கடந்த 10 நாட்களில் ஏலகிரிமலை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் கோயில்கள், வீடுகள் என பல இடங்களில் மர்ம நபர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றனர். இந்த தொடர் கொள்ளையால் பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. எனவே கொள்ளையில் ஈடுபடும் மர்மநபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: