ஆந்திர முதல்வர் உத்தரவின் பேரில் தலைவர் பதவியை பிருத்திவிராஜ் ராஜினாமா செய்தார்

திருமலை, ஜன.13: ஆந்திர முதல்வர் உத்தரவின் பேரில் பெண் ஊழியரிடம் காதல் உரையாடலில் ஈடுபட்ட ஆடியோ வெளிவந்த விவகாரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சி தலைவர் பதவியை நடிகர் பிருத்திவிராஜ் ராஜினாமா செய்தார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சி தலைவர் பிருத்திவிராஜ் அலுவலக பெண் ஊழியர் ஒருவரிடம் பேசிய காதல் உரையாடல் ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வந்த சர்ச்சையை அடுத்து அந்த ஆடியோ பதிவுகளை தடவியல் சோதனைக்கு உட்படுத்த அனுப்பப்பட்டதோடு விஜிலன்ஸ் விசாரணைக்கும் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி உத்தரவிட்டார். இந்நிலையில் முதல்வர் ஜெகன்மோகன், பிருத்திவிராஜை உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்யும்படி உத்தரவிட்டார. அதன்படி தனது பதவியை நடிகர் பிருத்திவிராஜ் நேற்று ராஜினாமா செய்தார்.

Tags : Prithviraj ,Andhra Pradesh ,
× RELATED சுகாதாரமற்ற முறையில் உணவு...