தொலைக்காட்சி பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் அறங்காவலர் குழு தலைவர் பேட்டி

திருமலை, ஜன.13: பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசிய தொலைக்காட்சி தலைவர் ஆடியோ விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறினார். திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சி தலைவர் பிருத்திவிராஜ் பெண் ஊழியர் ஒருவரிடம் பேசிய காதல் உரையாடல் ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஐதராபாத்தில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஏழுமலையானின் பூஜைகள் மற்றும் ஆராதனைகள் இந்து தர்ம பிரசாரத்திற்காக தொடங்கப்பட்டது தேவஸ்தான தொலைக்காட்சி.

இது ஏழுமலையானின் தொலைக்காட்சியாகும். தொலைக்காட்சியின் தலைவர் பெண் ஊழியரிடம் பேசப்பட்டதாக வந்துள்ள ஆடியோ விவகாரம் குறித்து பிருத்திவிராஜ்யிடம் கேட்டபோது, இது வேண்டும் என்றே தன் மீது பழி சுமத்துவதற்காக ஆடியோ மார்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார். எனவே, இதுகுறித்து உண்மை கண்டறிவதற்காக விஜிலன்ஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெகன்மோகனிடம் இந்த அறிக்கை வந்தவுடன் பக்தர்களின் மனம் புண்படாத வகையில் கலந்து ஆலோசித்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Interviewer ,board ,trustees ,TV ,
× RELATED 100க்கு ஆபாசப்படம் அனுப்பி 350 பேர் மீது...