மாஞ்சோலையில் அரசு பஸ் டயர் வெடித்து விபத்து

அம்பை, ஜன. 13: பாபநாசத்தில் இருந்து மாஞ்சோலை ஊத்து பகுதிக்கு அரசு பஸ் காலை 8 மணிக்கு புறப்பட்டது. மாஞ்சோலையை கடந்து எஸ்டேட் அருகே சென்றபோது பஸ்சின் பட்டை ஒடிந்து பழுதாகியது. இதையடுத்து பயணிகளை மாஞ்சோலையில் இறக்கி விட்டு காலியாக பஸ் திரும்பி வந்தது. மணிமுத்தாறு அருவி சாலையில் வரும் போது முன்பக்க டயர் வெடித்து ஒரு பக்கமாக இழுத்து சென்றது. பயணிகள் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட 3 பஸ்களில் ஊத்து பஸ் கடந்த 6 மாதங்களாக நிறுத்தப்பட்டது. தற்போது மற்றொரு பஸ்சும் பழுதானதால் தோட்டத் தொழிலாளர்கள், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்று வருபவர்கள், பள்ளி கல்லூரியில் தங்கி பயின்று வரும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாபநாசம் பணிமனை கிளை மேலாளர், தோட்டத் தொழிலாளர், மாணவர்கள் நலன் கருதி நல்ல நிலையில் உள்ள பஸ்சை இயக்குவதுடன், நிறுத்தப்பட்ட ஊத்து பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: